Publish Date: Wed, 16 May 2018 (21:16 IST)
Updated Date: Wed, 16 May 2018 (21:22 IST)
நடிகராகியிருக்கும் இந்த இசையமைப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரையும் டெஸ்ட் வைத்துத்தான் எடுக்கிறாராம்.
தளபதியின் பெயரைத் தன் பெயரின் முன் பாதியாகக் கொண்ட இசையமைப்பாளர் அவர். இன்னொரு இசையமைப்பாளர் நடிகரானதைப் பார்த்து, இவரும் ஹீரோ வேஷம் கட்டினார். இவர் இதுவரை நடித்த படங்களிலேயே ஒன்றிரண்டு படங்கள் தான் கல்லா கட்டின. ஆனால், எதிர்மறையான தலைப்புகள் வைக்கக்கூடாது என்ற தமிழ் சினிமாவின் சித்தாந்தத்தை உடைத்து எறிந்தவர் இவர்.
இவரே தயாரிப்பாளராகவும் இருப்பதால், தொழில்நுட்பக் கலைஞர்களை டெஸ்ட் வைத்துத்தான் தேர்வு செய்கிறாராம். பாடலாசிரியர், எடிட்டர், அவ்வளவு ஏன்… இந்த வாரம் ரிலீஸாக இருக்கும் படத்தின் இயக்குநரையே டெஸ்ட் வைத்துத்தான் செலக்ட் செய்தாராம் இந்த இசையமைப்பாளர் நடிகர்.