Publish Date: Wed, 16 Mar 2016 (11:41 IST)
Updated Date: Wed, 16 Mar 2016 (11:45 IST)
நடிகை அஞ்சலிக்கும் தனக்கும் இடையே உள்ள நட்பு காதலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று நடிகர் ஜெய் கருத்து தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியபுரம், சென்னை -28, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெய். இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அஞ்சலிக்கும் அவருக்கும் காதல் இருப்பதாக கிசு கிசு இருப்பது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ 2011ஆம் ஆண்டில் எனக்கும், அஞ்சலிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. அதன்பின் அவர் தெலுங்கு சினிமா பக்கம் போய்விட்டார். அதன்பின் நாங்கள் சந்தித்துக் கொள்ள முடியவில்லை.
இப்போது சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் சந்தித்து கொண்டோம். அப்போது எங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். அவருடன் சில பொது இடங்களுக்கு சென்றுள்ளேன். எங்களிடையே இருக்கும் நல்ல நட்பு காதலாக மாறினாலும் மாறலாம்” என்று கூறினார்.
அப்படியெனில் இருவரும் திருமனம் செய்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் “ திருமண பந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் நிறைய திருமணங்கள் இப்போது நீடித்து நிற்பதில்லை. ஏராளமானோர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். அதை பார்த்து எனக்கு திருமணத்தின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை” என்று கூறினார்.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு ஜெய்க்கு பிடித்திருக்கலாம். ஆனால் அஞ்சலி ஒத்துக்கொள்வாரா?..
Murugan
Publish Date: Wed, 16 Mar 2016 (11:41 IST)
Updated Date: Wed, 16 Mar 2016 (11:45 IST)