Publish Date: Fri, 26 May 2017 (18:16 IST)
Updated Date: Fri, 26 May 2017 (18:20 IST)
சமத்து நடிகைக்கும் அந்த பிரபல நடிகரின் மகனான தெலுங்கு நடிகருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து தற்போது திருமணத்திற்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களுடைய திருமணம் அக்டோபர் 6ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியானது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சமத்து நடிகையின் மாமனார் அவரது மகன் எப்போதும் சிரித்து கொண்டே இருப்பதாகவும், இதற்கு சமத்து நடிகைதான் காரணம் என்றும் கூறியுள்ளார். சமத்து நடிகையை எங்கள் பெண்ணாக ஏற்றுக்கொண்டு விட்டோம்.
சமத்து நடிகை ஆரம்பத்தில் என்னை சார் என்றுதான் கூப்பிடுவார். திருமணத்திற்கு பிறகு என்னை மாமா என்றுதான் அழைக்கவேண்டும் என்று அன்பு கட்டளை போட்டுள்ளாராம். அதற்கு சமத்து நடிகைக்கு கூப்பிட கசக்குமா என்ன?