சிறுவர்களின் நகைச்சுவைகள் சில உங்களுக்காக
கலா : எலிக்கு பேண்ட் போட்டா என்ன ஆகும்?
மாலா : என்ன ஆகும் நீயே சொல்லு.
கலா : எலிபேண்ட் ஆகும்.
கோபு - லியோ காபிய ஏன் கல்யாணம் பண்ணிக்க முடியாது?
பாபு - ஏன்னா... மணமான காபி லியோ காபின்னு சொல்றாங்களே தெரியாதா?
ராமு : கோயில் யானை ஒன்று இறந்துவிட்டது. எல்லோரும் தொட்டு தொட்டு அழுதாங்க ஏன்?
சோமு :ஏன்?
ராமு : ஏன்னா யானையைக் கட்டிண்டு அழ முடியாதுல்ல.. அதான்.