குழந்தைகளுக்கு எதைச் சொன்னாலும் கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்கள்.
கந்தையானாலும்
ஏன்டா நல்ல சட்டையக் கிழிச்சி அத துவச்சிக்கிட்டு இருக்க?
எங்க சார்தாம்மா சொன்னாரு... கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.
வக்கீல் படிப்பு
பையன வக்கீலுக்கு படிக்க வச்சது ரொம்பத் தப்பாப் போச்சு
ஏன்னே அப்படி சொல்றீங்க
படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.
வீட்டுக் கணக்கு
என்னடா இது கணக்கு நோட்டுல பால் கணக்கு, மளிகை கணக்கு எல்லாம் எழுதிக்கிட்டு வந்திருக்க?
நீங்க தானே டீச்சர் சொன்னீங்க?
நான் எப்போடா சொன்னேன்.
நேத்து சாயந்திரம்.. எல்லோரும் வீட்டுக் கணக்கை ஒழுங்கா எழுதிக்கிட்டு வாங்கன்னு சொன்னீங்களே? மறந்துட்டீங்களா?