Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கெஞ்சும் ராகவா லாரன்ஸ் ; மறுக்கும் போரட்டக்காரர்கள் : மெரினாவில் பரபரப்பு

Advertiesment
Ragava lawrance
, திங்கள், 23 ஜனவரி 2017 (14:03 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தை கை விட வேண்டும் என சென்னை மெரினா கடற்கரையில் உள்ள போராட்டக்காரர்களை நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்.


 

 
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில், கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடந்தி வந்தர்களை கலைந்து செல்லுமாறு இன்று காலை போலீசார் வலியுறுத்தினார்கள்.  ஆனால், சிலர் அதை ஏற்க மறுத்து, கடலில் அருகில் சென்று மனித சங்கிலி அமைத்து அங்கிருந்து செல்லமாட்டோம் என கூறி வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் போலீசார் தடியடியும் நடத்தினார்கள். இதனால் மெரினா கடற்கறை போர்க்களமானது. 
 
அந்நிலையில், மாணவர்கள் யாரும் கடலுக்குள் சென்று போராட்டம் நடத்த வேண்டாம் என அவர் ஏற்கனவே ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மெரினா கடற்கரைக்கு சென்ற ராகவா லாரன்ஸ், நமக்கு வெற்றி கிடைத்து விட்டது. அதை கொண்டாட வேண்டிய நேரமிது. எனவே, இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என கோரிக்கை விடுத்து வருகிறார். அனால் ஏராளமான இளைஞர்கள் அதை ஏற்காமல், அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களை ஈவு இரக்கமின்றி அடிக்கும் போலீஸின் வெறியாட்டம்: அதிர்ச்சி வீடியோ!