Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாலு கேமரா வெச்சு நச்சுன்னு ஒரு ஸ்மார்ட்போன்! – Xiaomi 13 Ultra சிறப்பம்சங்கள்!

Advertiesment
Xiaomi 13 Ultra
, புதன், 19 ஏப்ரல் 2023 (15:59 IST)
பிரபலமான ஷாவ்மி நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போனை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது முதலாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சமீபாக ஸ்னாப்ட்ராகன் சிப்செட் தொழில்நுட்பம் வைரலாகியுள்ள நிலையில் மீடியாடெக், ஸ்னாப்ட்ராகன் இடையே போட்டி நிலவி வருகிறது.

சமீபமாக பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் மேலும் பல சிறப்பம்சங்களோடு ஷாவ்மி நிறுவனம் தனது Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
  • 6.73 இன்ச் LTPO3 அமோலெட் டிஸ்ப்ளே,
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2,
  • ஆக்டோகோர் சிபியூ, அட்ரினோ 740 ஜிபியு
  • 12ஜிபி/ 16 ஜிபி ரேம், 256 ஜிபி/512 ஜிபி/ 1 டிபி மெமரி,
  • 32 எம்பி முன்பக்க கேமரா
  • 50.3 எம்.பி வைட், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ, 50 எம்பி டெலிபோட்டோ, 50 எம்பி அல்ட்ரா வைட் என நான்கு லென்ஸ் கொண்ட குவாட் கேமரா
  • 4900 mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங்,
  • அண்டர் டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட், வைஃபை, 5ஜி தொழில்நுட்பம்

இந்த Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போன் ப்ளாக், ஆலிவ் க்ரீன், வொயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் அடிப்படை விலை ரூ.71,590 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேம் மற்றும் மெமரி வசதிக்கேற்ப விலை மாறும். எனினும் அதீத கேமரா அம்சத்துடன் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ள இந்த Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போன் பலரை கவர்ந்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிவு.. என்ன காரணம்?