அடுத்தடுத்து அதிரடி! 5ஜி சிம்கார்டுகளை அறிமுகப்படுத்திய BSNL!

Prasanth Karthick
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (13:58 IST)

சமீபமாக பலரும் BSNL நெட்வொர்க்கிற்கு மாறி வரும் நிலையில் முதன்முறையாக 5ஜி சிம்கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது BSNL.

 

 

கடந்த சில நாட்கள் முன்னதாக இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. இதனால் மக்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில் இன்ப அதிர்ச்சியாக தனது ரீசார்ஜ் ப்ளான்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டது BSNL. 

 

அதிக தொகை கொடுத்து ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதால் ஏராளமான மக்கள் BSNL சேவைகளுக்கு வேகமாக மாறத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 4ஜி சேவை முக்கியமான சில நகரங்களில் மட்டுமே உள்ள நிலையில் BSNL அதை அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும்படி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் டாடா நிறுவனத்தின் உதவியும் கைகோர்க்க தற்போது 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது BSNL நிறுவனம்.

 

தற்போது 5ஜி சிம்கார்டுகளை BSNL அறிமுகப்படுத்தி இருந்தாலும் இந்த சேவை முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் கிடைக்கும் என்றும், நாளடைவில் நாடு முழுவதும் 5ஜி சேவையை விஸ்தரிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் BSNL நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments