Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.20 ஆயிரத்துக்குள்ள Smart TV வாங்கணுமா? அட்டகாசமான ஸ்மார்ட் டிவிக்கள் இதோ!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (13:15 IST)
தற்போது ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனை அதிகமாகியுள்ள நிலையில் குறைந்த விலையில் பல சிறப்பம்சங்களுடன் கூடிய ப்ராண்டட் டிவிகள் பற்றி இங்கே காணலாம்.



இணைய வசதி, ஓடிடி ஆப்கள், வாய்ஸ் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல வசதிகளுடன் வெளியாகும் ஸ்மார்ட் டிவிக்கள் பெரும்பாலான மக்களின் விருப்ப தேர்வாக உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவிக்கள் விலை அதிகமாகவும் உள்ளன. ரூ.20 ஆயிரத்திற்கு உள்ள ப்ராண்டட் ஸ்மார்ட் டிவிக்கள் குறித்து பார்ப்போம்.

Samsung UA32T4380AKXXL



பிரபல சாம்சங் நிறுவனத்தின் இந்த Samsung UA32T4380AKXXL ஸ்மார்ட் டிவி 32 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது.

1366 x 768 ரெசல்யூசன் கொண்ட இந்த டிவியில் வைஃபை வசதி உள்ளது. 20W Output கொண்ட 2 ஸ்பீக்கர்கள் உள்ளன. 2 HDMI port மற்றும் 1 USB port உள்ளது.

32 இன்ச் Samsung UA32T4380AKXXL ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,490 ஆக உள்ளது.

Xiaomi Mi TV 4A




ஷாவ்மி நிறுவனத்தின் இந்த Xiaomi Mi TV 4A ஸ்மார்ட் டிவி 32 இன்ச் டிஸ்ப்ளே, 1920 x 1080 ஃபுல் ஹெச்டி ரெசல்யூசன் திரையை கொண்டுள்ளது.

குவாட்கோர் ப்ராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி இதில் உள்ளது.

3 HDMI port மற்றும் 2 USB port உள்ளது. 20W Output கொண்ட 2 ஸ்பீக்கர்கள் உள்ளன

இந்த Xiaomi Mi TV 4A 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.13,999

 
MarQ by Flipkart Innoview 43AAUHDM




ஈ காமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட்டின் கிளை நிறுவனமான MarQ மூலமாக வெளியிடப்பட்டுள்ளது இந்த MarQ by Flipkart Innoview 43AAUHDM ஸ்மார்ட் டிவி.

43 இன்ச், 3840 x 2160 4K ரெசல்யூசன் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியில் 4 HDMI port மற்றும் 3 USB port உள்ளது. ஒரு ஹெட்போன் போர்ட், Ethernet கனெக்சன் போர்ட்டும் உள்ளது.

20W Output கொண்ட 2 ஸ்பீக்கர்கள் உள்ளன. மீடியாடெக் CA53 குவாட்கோர் ப்ராசஸர், 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

இந்த MarQ by Flipkart Innoview 43AAUHDM ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.17,999

 
Vu 43CA 43-inch Ultra HD 4K Smart LED TV




43 இன்ச், 3840 x 2160 4K ரெசல்யூசன் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியில் 3 HDMI port மற்றும் 2 USB port உள்ளது.

வைஃபை, ப்ளூடூத் வசதிகள் உள்ள இந்த Vu 43CA ஸ்மார்ட் டிவியில் 40W திறன் கொண்ட 4 ஸ்பீக்கர்கள் உள்ளது.

மாலி 470 சிப்செட்டில் 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. 43 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Vu 43CA மாடலின் விலை ரூ.21,999

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments