Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Whatsapp க்கு பதிலாக வந்த Sandes App! – சிறப்பம்சங்கள் என்னென்ன?

Advertiesment
Whatsapp க்கு பதிலாக வந்த Sandes App! – சிறப்பம்சங்கள் என்னென்ன?
, புதன், 24 பிப்ரவரி 2021 (17:15 IST)
வாட்ஸப்பின் தனிநபர் கொள்கை பிரச்சினைகளால் அதன் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு சிறப்பம்சங்கள் கொண்ட Sandes App என்ற செயலியை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸப் சமீபத்தில் வெளியிட்ட தனிநபர் கொள்கைகள் உலகளவில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகின, அதை தொடர்ந்து எலான் மஸ்க் உள்ளிட்ட பல பெரும் பணக்காரர்களே வாட்ஸப் உபயோகிக்க வேண்டாம் என கூற பலர் வாட்ஸப் பயன்பாட்டை குறைத்து சிக்னல், டெலிகிராம் போன்றவற்றிற்கு மாறியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் வாட்ஸப்பின் தனிநபர் கொள்கை சார்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசின் தேசிய தகவல் மையம் Sandes app என்னும் புதிய செயலியை உருவாக்கியுள்ளது. இது தற்போதைக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் APK கோப்பாக மட்டும் கிடைக்கிறது.

இதை ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு அதிகமான ஓஎஸ் கொண்ட மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மொபைல் எண் அல்லது இமெயில் ஐடி கொண்டு இந்த செயலியில் கணக்கு தொடங்கலாம். ஆனால் வாட்ஸப்பில் உள்ளது போல ஒரு எண்ணில் தொடங்கிய கணக்கை மறு எண்ணிற்கு மாற்றி கொள்ளும் வசதி இதில் கிடையாது.

ஒருமுறை ஒரு எண் மூலம் கணக்கு தொடங்கிவிட்டால் அதை முழுவதும் அழித்துவிட்டு வேறு கணக்கு அதே எண்ணில் தொடங்க முடியாது.

வாட்ஸப்பில் உள்ளது போல எண்ட் டு எண்ட் டிஸ்க்ரிபடட் குறுஞ்செய்தி அனுப்பும் முறையே இதிலும் பின்பற்றப்படுகிறது

ரகசிய மெசேஜ் என்றால் அதற்கான சிம்பலை பயன்படுத்தி மெச்செஜ் அனுப்பும் நபருக்கு தெரியப்படுத்தலாம்.

மேலும் புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் கிப்ஸ் பகிரும் ஆப்சன்களும் உண்டு

வாட்ஸ் அப் போல பேக் அப்பை கூகிள் ட்ரைவில் மட்டுமல்லாது போனிலேயே சேமித்துக் கொள்ளும் வசதி இதில் உண்டு.

இந்த செயலி குறித்த தெளிவான விளக்கத்தை மத்திய அரசு அளிக்காவிட்டாலும் தற்போதைக்கு அரசு அதிகாரிகள் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனவர்களுடன் நடுக்கடலில் ராகுல்காந்தி! – மீனவர்களுக்காக உருக்கம்!