Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பம்சம்லாம் ஒன்னுதான்.. பேருதான் வேற! Samsung Galaxy M14, A14, F14! எது பெஸ்ட்?

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (16:54 IST)
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் போட்டி நடந்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனம் போட்டியாக வரிசையாக பல ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது.

சமீபமாக பல மாடல் ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டு வந்தாலும் பட்ஜெட் விலை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ரூ.12,000 முதல் ரூ.15,000க்குள் பல ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது.

அப்படியாக சாம்சங் வெளியிட்ட சமீப மாடல்களான Samsung Galaxy M14, Samsung Galaxy A14, Samsung Galaxy F14 ஆகிய மூன்று மாடல்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை கொண்டுள்ளன.

மூன்று மாடல்களுமே Samsung Exynos 1330 சிப்செட்டை கொண்டுள்ளன. M14 மற்றும் F14 இரண்டு மாடல்களும் One UI Core 5.1 இயங்குதளத்தையும், A14 மாடல் OneUI 5.0 இயங்குதளத்தையும் கொண்டுள்ளது. மூன்று மாடல்களுமே 5ஜி தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கின்றன. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்ஸில் இயங்குகின்றன.

கேமரா குவாலிட்டியை பொறுத்தவரை M14, A14 இரண்டு மாடல்களிலும் 50 எம்.பி வைட் ஆங்கிள், 2 எம்.பி மேக்ரோ, 2 எம்.பி டெப்த் சென்சார் கேமராக்கள் உள்ளது. F14 மாடலில் மட்டும் 50 எம்பி+2 எம்பி டூவல் கேமரா உள்ளது. மூன்று மாடல்களிலும் 13 எம்.பி முன்பக்க கேமரா உள்ளது.



மூன்று மாடல்களிலும் 4 ஜிபி ரேம் உள்ளது. Samsung Galaxy M14, F14 இரண்டு மாடல்களிலும் 128 ஜிபி மெமரியும், A14-ல் 64 ஜிபி மெமரியும் உள்ளது. Samsung Galaxy M14, F14 இரண்டு மாடல்களிலும் 6000 mAh பேட்டரியும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. Samsung Galaxy A14 –ல் 5000 mAh பேட்டரியும், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Samsung Galaxy M14 மாடலின் ஆரம்ப விலை ரூ.13,490 ஆகவும், Samsung Galaxy A14 மாடலின் ஆரம்ப விலை ரூ.16,499 ஆகவும், Samsung Galaxy F14 மாடலின் விலை ரூ.14,490 ஆகவும் உள்ளது.

சிறப்பம்சங்களில் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும் அதிகம் ஒன்று போல காணப்படும் மூன்று மாடல்களில் விலை குறைவாக உள்ள Samsung Galaxy M14 பலருக்கு முதல் சாய்ஸாக உள்ளது. 15,000 பட்ஜெட்டுக்குள் வாங்க விரும்புபவர்கள் மூன்று மாடல்களில் எது வேண்டுமானாலும் வாங்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டான்லி மருத்துவமனையில் இன்னொரு மருத்துவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி தகவல்..!

சொர்க்கத்தில் இருந்து இந்திரா காந்தி வந்தாலும் காஷ்மீருக்கு 370வது பிரிவு கிடைக்காது: அமித்ஷா

2 மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை! ரசீதும் கிடைக்கும்..!

சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments