Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாம்சங்கின் Black Friday சிறப்பு விற்பனை: இவ்வளவு சலுகையா??

Advertiesment
சாம்சங்கின் Black Friday சிறப்பு விற்பனை: இவ்வளவு சலுகையா??
, புதன், 23 நவம்பர் 2022 (13:04 IST)
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் "Black Friday" எனும் சிறப்பு விற்பனை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


சாம்சங்கின் Black Friday சிறப்பு விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி துவங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி ஆகியவை சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இது குறித்த விவரம் பின்வருமாறு…

விற்பனையின் போது, நிறுவனம் Samsung Galaxy Z Flip 3, Galaxy S22 series, Galaxy S21 FE மற்றும் பிற கைபேசிகளுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. சுவாரஸ்யமாக சாம்சங் HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தள்ளுபடிகளைப் பெறலாம்.

Samsung Galaxy S22 சீரிஸ்:
Galaxy Series S22 இன் விலையை அனைத்து தள்ளுபடிகளையும் சேர்த்து ரூ.60,000க்கு கீழ் செல்லும். தற்போது ​​கேலக்ஸி S22 ரூ. 67,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேசமயம், Galaxy S22 Ultra மற்றும் Galaxy S22+ அதிக மதிப்புக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4:
சாம்சங் தனது சமீபத்திய ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை வெளியிட்டுள்ளது. ரூ. 89,999க்கு விற்கப்படும் Galaxy Z Flip 4, வங்கிச் சலுகைகள் உட்பட ரூ. 80,999 தள்ளுபடி விலையில் வாங்குவதற்குக் கிடைக்கும்.

மேலும், விற்பனை டீசரின் படி, சாம்சங் கேலக்ஸி Z Flip 3 ரூ. 60,000 (அனைத்து வங்கி சலுகைகள் உட்பட) குறைவாக விற்கப்படும் என்று கூறுகிறது. Samsung Galaxy Z Fold 4 பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் அனைத்து வங்கி சலுகைகளையும் உள்ளடக்கிய ரூ. 10,000 தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது.

Samsung Galaxy S20FE 5G:
Samsung Galaxy S20FE 5G (8GB RAM + 128GB ROM) ரூ. 74,999க்கு பதிலாக ரூ. 31,999 தள்ளுபடி விலையில் (அனைத்து சலுகைகளையும் உள்ளடக்கி) கிடைக்கும். அதேசமயம், Samsung Galaxy S21 FE ஆனது ரூ. 32,999க்கு கிடைக்கிறது. ரூ. 1,000 வவுச்சரைப் பெறும் சாம்சங் ஆப் மூலம் வாங்கினால், வாடிக்கையாளர்கள் ரூ. 31,999க்கு அதைப் பெறலாம்.

Samsung M33 5G:
வாடிக்கையாளர்கள் Samsung M33 5G (6GB RAM + 128GB ROM) ரூ. 24,999க்கு பதிலாக ரூ. 16,999க்கு (அனைத்து வங்கிச் சலுகைகள் மற்றும் வரவேற்பு வவுச்சரையும் சேர்த்து) வாங்கலாம்.

Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்களும் பணிநீக்கம் செய்ய போறோம்! – HP நிறுவனம் ப்ளான்??