ஃபேஸ்புக்கில் ஒருவரது நட்பு பட்டியியலில் இல்லாதவர்கள் அடுத்தவரின் சுயவிவரங்களைப் பார்க்காதவாறு ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய லாக் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இவ்வதியை ஒருவர் பயன்படுத்திவிட்டால் ஒருவரது பேஸ்புக் புகைப்படத்தையோ புரைபைல்லோ, கவர் போட்டோவையோ சூம் செய்து பார்க்க முடியாது அதை டவுன் செய்யவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஃபேஸ்புக் இந்தியாவின் பொதுக்கொள்கை இயக்குநர் அங்கி தாஸ்.
ஃபேஸ்புக்கில் பெயரின் கீழே, மோர் ( more ) என்ற ஆப்சனுக்குச் சென்றால் அதில் லாக் புரோபைல் ( lock profile )ஆப்சனை எனேபில் செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.