சமீபத்தில் வெளியாகியுள்ள ரியல்மி நிறுவனத்தின் புதிய வெளியீடான Realme GT3 அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் பல மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு பிரபலமாக இருந்து வரும் நிறுவனம் ரியல்மி. தற்போது உள்ள ஸ்மார்ட்போன்களை விட அதிவேகமாக சார்ஜ் ஏறக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் Realme GT3 என்ற புதிய ஸ்மார்ட்போனை தற்போது ரியல்மி வெளியிட்டுள்ளது.
Realme GT3 அட்டகாசமான சிறப்பம்சங்கள்:
-
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8+ Gen 1
-
ஆக்டாகோர் சிபியூ, அட்ரினோ 730 ஜிபியூ
-
ஆண்ட்ராய்டு 13, ரியல்மி UI 4.0
-
8 ஜிபி / 12 ஜிபி / 16 ஜிபி ரேம் வகைகள்
-
128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மற்றும் 1 டிபி இண்டெர்னல் மெமரி
-
16 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
-
50 எம்பி ப்ரைமரி வைட் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட், 2 எம்பி மைக்ரோஸ்கோப் கேமரா
-
யூஎஸ்பி டைப் சி, 4600 mAh பேட்டரி, 240W ஃபாஸ்ட் சார்ஜிங்
அதிவேக ஃபாஸ்ட்சார்ஜர் மூலமாக வெறும் 10 நிமிடங்களிலேயே 100 சதவீதம் சார்ஜ் ஏறிவிடும். இதுவரை வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களிலேயே இதுதான் அதிவேக சார்ஜிங். மேலும் இதில் கேமராவுக்கு அருகே பல வண்ணங்களில் ஒளிரக்கூடிய ஆர்ஜிபி எல்.இ.டி லைட் உள்ளது. நமது விருப்பத்திற்கு ஏற்ப அதன் வண்ணங்களை செட்டிங்ஸ் மூலமாக மாற்றிக் கொள்ளலாம்.
இந்த Realme GT3 ஸ்மார்ட்போன் 610 ஈரோ (இந்திய மதிப்பில் தோராயமாக 53 ஆயிரம் ரூபாய்) என அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்போது முழு விலை நிலவரம் தெரிய வரும்.