Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’டுவிட்டர் ’ கணக்கில் வந்தது புதுக்கட்டுப்பாடு

’டுவிட்டர் ’ கணக்கில் வந்தது புதுக்கட்டுப்பாடு
, திங்கள், 15 ஏப்ரல் 2019 (19:29 IST)
சமூக வலைதளங்கள் இல்லாமல் இன்றைய இளைஞர்களை நம்மால் பார்க்க முடியாது. அந்த அளவு இன்றைய நமது இளையோரை ஆட்டுவிக்கின்றது சமூக வலைதளம். அதிலும் குறிப்பாக பேஸ்புக், டுவிட்டடில் அக்கவுண்ட் வைத்துக்கொள்வதுதான் நவநாகரிகமாக கருதப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ள ஒருவர் இனிமேல் அதிக எண்ணிக்கையிலான நபர்களை பின் தொடர முடியாது.
தற்போது வதந்தி, போலி தகவல் போன்ற பொய்யான செய்திகளை களையவே இந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
அதனடிப்படையில் டுவிட்டரில் ஒரு பயனாளர் தனது கணக்கில் இதுவரை 1000 பேரை பின் தொடர்ந்தனர், ஆனால் இனிமேல் அது 400 கணக்குகளாக குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
 
இதன்மூலம் தேவையற்ற  விதமாக குறுகிய காலத்தில் அதிகமானவர்களை பின் தொடர்பவர்கள் மற்றும் அதிக கணக்குகளை பின் தொடர முயற்சிப்பவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று  இந்நிறுவனம் அறிவித்துள்ளது.r

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ’அசுரப் பாய்சல்’