Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Nothing நிறுவனத்தின் பட்ஜெட் விலை புதிய ஸ்மார்ட்போன்! CMF Phone 1 சிறப்பம்சங்கள் என்ன?

Prasanth Karthick
புதன், 10 ஜூலை 2024 (17:33 IST)
பிரபலமான நத்திங் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிதாக CMF Phone 1 என்ற மாடலை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய லக்ஸரி ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நிறுவனமாக நத்திங் நிறுவனம் இருந்து வருகிறது. இதுவரை நத்திங் நிறுவனத்தில் இருந்து இரண்டு ஸ்மார்ட்போன்களே வெளியாகியிருந்தாலும், சந்தையில் இந்த நிறுவனத்திற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யும் நோக்கில் நத்திங் நிறுவனம் CMF என்ற புதிய ஸ்மார்ட்போன் ப்ராண்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் ஸ்மார்ட்போனான CMF Phone 1 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

CMF Phone 1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் LTPS டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட்
  • 2.5 ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 வித் நத்திங் ஓஎஸ்
  • 6 ஜிபி / 8 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 MP + 2 MP ப்ரைமரி டூவல் கேமரா
  • 16 MP முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 33 W பாஸ்ட் சார்ஜிங்

இந்த CMF Phone 1 ப்ளூ, லைட் க்ரீன், ஆரஞ்சு, ப்ளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும். இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.16,999 ஆகவும் (வங்கி சலுகைகளுடன்) உள்ளது.

இந்த CMF Phone 1 ஸ்மார்ட்போன் ஜூலை 12 முதல் தனது விற்பனையை தொடங்கும் நிலையில் முன்பதிவுகளும் தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments