Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.21,000 விலை குறைப்பு: பிளிப்கார்ட் அதிரடி சலுகை...

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (15:03 IST)
புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை பிளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
 
கூகுள் பிக்சல் 2 சீரிஸ் ஸ்மார்ட்போன் முதல் கேலக்ஸி எஸ் 7, ஐபோன் என ஃபிளாக்க்ஷிப் ஸ்மார்ட்போன்களில் துவங்கி, பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 7 ரூ.19,010 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.26,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிளாட்டினம் கோல்டு நிறத்திற்கு மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் விலையில் ரூ.21,001 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.61,000-க்கு விற்பனை செய்யப்பட்ட பிக்சல் 2 ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் ரூ.39,999-க்கு வாங்க முடியும்.
 
இதை தவிர்த்து சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட், சியோமி Mi A1, ரெட்மி நோட் 4, ஹானர் 6X, மோட்டோ ஜி 5 பிளஸ், லெனோவோ K8 பிளஸ், ஐபோன் 8 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பு: இந்த சலுகைகள் எந்நேரத்திலும் மாற்றப்படலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments