Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100 நாட்களில் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்பிளிக்ஸ்!

100 நாட்களில் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்பிளிக்ஸ்!
, புதன், 20 ஏப்ரல் 2022 (14:36 IST)
ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2,00,000 என்ற அளவில் குறைந்துள்ளது. 

 
இந்தியாவில் பல்வேறு ஓடிடி தளங்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தாலும் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் ஓடிடியாக நெட்ப்ளிக்ஸ் இருந்து வருகிறது. பல்வேறு படங்கள், வெப்சிரிஸ், நிகழ்ச்சிகளை வழங்கும் நெட்ப்ளிக்ஸ் சில ஆண்டுகள் முன்னதாக வாடிக்கையாளர்களை ஈர்க்க தனது சப்ஸ்க்ரிப்ஷன் ப்ளான்களில் மாற்றம் செய்தது. 
 
இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 221.6 மில்லியன் சந்தாதாரர்களுடன் உள்ள நிறுவனமாக உள்ளது. இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்து சற்று குறைந்து அளவாகும்.
 
மேலும் காலாண்டு வருவாய் அறிக்கையின் படி, ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2,00,000 என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் செவ்வாயன்று நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் மதிப்பு 20% குறைந்தது. 
 
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள காரணத்தால் ரஷ்ய நாட்டில் தங்கள் நிறுவன சேவைகளை நிறுத்திக் கொண்டுள்ளது இதற்கு ஒரு காரணம் என நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மேலும் இரண்டு மில்லியன் சந்தாதாரர்களை அந்நிறுவனம் இழக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள்‌ ஒத்தி வைப்பு- நாடாளுமன்றத்தில் தகவல்