Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

’வாட்ஸ் அப்பை ’வளைத்துப் போட உதவியது என் செல்ல நாய் தான் - மார்க் ஜூபெர்க்

Advertiesment
My pet dog
, புதன், 13 பிப்ரவரி 2019 (15:03 IST)
வாட்ஸ் அப்  இன்றைய இளைஞர்களின் செல்போன் டானிக்காக உள்ளது. அது இல்லாத செல்போன்களே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லோரையும் வசியப்படுத்தி உள்ளது. இந்த வாட்ஸ் அப் நிறுவனத்தை தன் நிறுவனத்துடன் இணைக்க தன் செல்ல நாய் தான் உதவியது என பேஸ்புக் நிறுவனத்தின்  தலைவர் மார்க் ஜூகர் பெர்க் கூறியுள்ளார்.
பல கோடி பயனாளர்களைக் கொண்ட பிரசித்தி பெற்ற பேஸ்புக் வலைதளத்தை உருவாக்கியர் மார்க்ஜூகர்பெர்க். ஏற்கனவே அவர் புகைப்படங்களை பதிவிடும் முன்னணி வலைதளமான இன்ஸ்டாகிராமை வாங்கி இருந்தார்.
 
பின்னர்,கடந்த 2014 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கினார்.இதற்கான டீலிங்கை பேசும் போது நடந்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மார்க்ஜூகர் பெர்க் கூறியுள்ளதாவது:
 
வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்க அதன் உரிமையாளரான ஜானுடன் என் வீட்டில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஜான் முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த என் செல்ல நாயான ’பீஸ்ட் ’ஜானின் மடியில் மீது ஏறி உட்கார்ந்தது. ஜான் நாயை கொஞ்ச தொடங்கினார். உடனே அடுத்த நொடியே அவர் இந்த உடன்படிக்கையை ஒப்புகொண்டதாக மார்க் கூறியுள்ளார். 

இதில் முக்கியமாக வாட்ஸ் அப் உடனான ஒப்பந்தம் முடிய முக்கியக் காரணம் என ஆண் செல்ல நாய்  பீட்ஸ்  பற்றிக் கூறியுள்ளார்.
webdunia
மார்கின் செல்ல  நாயான பீட்ஸ் க்கு என்று பேஸ்புக்கில் பல விசிறிகள் இருக்கிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் கோயில் கட்ட சொல்லி குவைத் பாடகர் பாடினாரா?