Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிக மிக குறைந்த விலையில் Jio AirFiber! – ஜியோ அசத்தல் அறிவிப்பு!

Advertiesment
Jio AirFiber
, திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (16:18 IST)
ஜியோ நிறுவனத்தின் வயர்லெஸ் ஏர் ஃபைபர் சேவைகள் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இந்தியா முழுவதும் வேகமாக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதற்கேற்ப வேகமாக அப்டேட் ஆகி வருகின்றன. முன்னதாக ஸ்மார்ட்போன் இணைய சேவையை அடுத்து ஃபைபர் கேபிள் வழியாக அனைத்து பகுதிகளுக்கும் இணைய சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பல முக்கிய நகரங்களிலும் ஃபைபர் சேவை இருந்தாலும், கிராமங்கள் பலவற்றை ஃபைபரால் அடைய முடியவில்லை.

இதனால் தொலைதொடர்பு நிறுவனங்கள் வயர்லெஸ் ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் செய்து வருகின்றன. அந்த வகையில் முன்னதாக Airtel Xtream AirFiber அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதற்கு போட்டியாக ஜியோ நிறுவனமும் தனது Jio AirFiber ஐ அறிமுகம் செய்துள்ளது. செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இந்த சேவை தொடங்க உள்ளது.

மேலும் இந்த Jio AirFiber –ன் ரீசார்ஜ் ப்ளான்கள் தற்போது நடப்பில் உள்ள மற்ற ஏர் ஃபைபர் (ஏர்டெல்) நிறுவனங்களின் ரீசார்ஜ் ப்ளான்களை விட 20% குறைவான விலையில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏர் ஃபைபர் சேவைகள் மூலம் கடைகோடி கிராமங்களும் இணைய சேவையை பெற முடியும் என்பதால் வாடிக்கையாளர்களும் அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.k

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகாரிகளை, பொதுமக்களை மிரட்டியே இந்த ஆட்சி- அதிமுக குற்றச்சாட்டு