இந்திய இரயில்வே இணையதளத்தில் தட்கல் டிக்கெட் மற்றும் சாதா டிக்கெட் முன்பதிவு இன் போது பணத்தை பிறகு செலுத்தும் வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இணையதளத்தில் சாதாரண டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது ஏற்படும் மிகப்பெரும் பிரச்சனைகளில் ஒன்று பணம் செலுத்துதல் ஏற்படும் கோளாறுகள் இதனால் பலரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. இந்தப் பிரச்சனையை தீர்க்க ரயில்வே துறையை போது புதிய வசதியை கொண்டு வந்துள்ளது அதன்படி நாம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது பயண விவரங்களை தெரிவித்த பின்பு பெயர் என்ற பட்டனை அழுத்தி பணத்தைப் பிறகு செலுத்திக் கொள்ளலாம்.
பே லேட்டர் என்ற பட்டனை அழுத்திய பின்பு நம்மை அதன் பக்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் .அதில் நாம் நம்முடைய மொபைல் நம்பர் மற்றும் ஓடிபி மூலம் லாகின் செய்து நமது பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதை உறுதிப் படுத்திய 14 நாட்களுக்குள் நாம் பணத்தைச் செலுத்தினால் போதும். அவ்வாறு செலுத்த முடியாவிட்டால் அதன் பின்பு 3.5 சதவீதம் வட்டியுடன் நாம் பணத்தை செலுத்த வேண்டி வரும். ஒருவேளை நாம் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதற்கு அடுத்த முறை பே லேட்டர் வசதியை நாம் பயன்படுத்த முடியாது. ரயில்வே துறையின் இந்த வசதியானது பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.