ஆப்பிள் நிறுவனம் தனது ஐஃபோன்களுக்கான புதிய iOS 17 வெர்சனை அறிமுகம் செய்துள்ள நிலையில் சில ஐஃபோன்களில் இந்த அப்டேட் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஐஃபோன், மேக் புக் என பல தயாரிப்புகளை வெளியிட்டு தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ள நிறுவனம் ஆப்பிள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் மாடல்களை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த WWDC 2023 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப சாதனங்களையும், ஐஃபோன்களுக்கு புதிய iOS 17 வெர்சனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த iOS 17 குறிப்பிட்ட சில ஐஃபோன்களில் சப்போர்ட் ஆகாது என்றும் தெரிவித்துள்ளது.
iOS 17 சப்போர்ட் செய்யும் ஐஃபோன் மாடல்கள்:
ஐஃபோன் 14, 14 ப்ளஸ், 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் 13, 13 மினி, 13 ப்ரோ, 13 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் 12, 12 மினி, 12 ப்ரோ, 12 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் 11, 11 ப்ரோ, 11 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் XR
ஐஃபோன் Xs & Xs Max
ஐஃபோன் SE (2nd &3rd Gen)
iOS 17 சப்போர்ட் செய்யாத ஐஃபோன் மாடல்கள்:
ஐஃபோன் எக்ஸ்
ஐஃபோன் 8 & 8 ப்ளஸ்
இதுதவிர ஐஃபோன் 8 மாடலுக்கு முன்னதாக வெளியான அனைத்து மாடல்களிலும் இந்த புதிய iOS 17 சப்போர்ட் செய்யாது.