தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா நிறுவனம் 2016- 2017 ஆம் நிதியாண்டில் ரூ.404 கோடி நஷ்டமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஜியோ சேவை தொடங்கப்பட்டது முதல் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதில் ஐடியாவும் ஒன்று.
இந்நிலையில், 2016- 2017 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரூ.404 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், வருமானமும் 13.7 சதவீதம் குறைந்துள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.