Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன ஆனது எச்.டி.எஃப்.சி. வங்கிக்கு… ஆன்லைன் பரிவர்த்தனை முடக்கம் – வாடிக்கையாளர்கள் அவதி !

என்ன ஆனது எச்.டி.எஃப்.சி. வங்கிக்கு… ஆன்லைன் பரிவர்த்தனை முடக்கம் – வாடிக்கையாளர்கள் அவதி !
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (13:02 IST)
எச்.டி.எஃப்.சி வங்கியின் சர்வர் இன்று காலை முதல் ஆன்லைன் பணப்பரிமாற்றம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிகளில் மிக முக்கியமான வங்கி எச்.டி.எஃப்.சி வங்கி. இந்த வங்கியில் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் நகர்ப்புறத்தில் வசிப்போர் ஆகியோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்கள் பணப்பரிவர்த்தனைக்காக ஆன்லைன் பேங்கிங் போன்றவற்றையே பெரும்பாலும் உபயோகிக்கின்றனர்.

இன்று காலை இந்த வங்கியின் சர்வர் முடங்கியதால் ஆன்லைன் பணப்பரிமாற்றம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் ’பிரச்சனையை சரிசெய்ய தீவிரமாக முயன்று வருகிறோம். விரைவில் சரிசெய்வோம்’ எனக் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சி பேர சொல்லி வர எவனையும் நம்பாதீங்க.. சொந்த நிர்வாகிகளை நாரடித்த கருணாஸ்!