Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூகுள் போட்டோஸின் திடீர் அறிவிப்பு … பயனர்களிடம் கல்லா கட்ட திட்டம்??

Advertiesment
கூகுள் போட்டோஸின் திடீர் அறிவிப்பு … பயனர்களிடம் கல்லா கட்ட திட்டம்??
, வியாழன், 12 நவம்பர் 2020 (16:51 IST)
இன்றைய உலகம் தொழில்நுட்பத்திற்குப் பழக்கமாகிவிட்டதால் நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களின் துணையின்றி நம்மால் எதுவும் சாத்தியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்நிலையில், கடந்த  5 ஆண்டுகளாக படங்கள், இமேஜ் மற்றும் வீடியோக்களை அன்லிமிட்டேட் சேமிப்பை இலவசமாகக் கொடுத்து வந்த கூகுள் போட்டோஸ் இனிமேல் வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் அதை நிறுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.,

மேலும்,  கூகுள் போட்டோஸில் இனி 15ஜிபி வரை மட்டுமே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிக்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரணமாகவே இமெயில், போன்ற சேவ் டிரைவ்களிலும் இதே வழக்கமான முறைகளே உள்ளது என்றாலும் பயனர்கள் தங்களுக்கு புகைப்படம் வீடியோக்களைச் சேமித்து வைக்க இந்தத் தொழில்நுட்பத்தை தவர விடமாட்டார்கள் எனபதால் காசு போனாலும் பரவாயில்லை என்று இதில் சில பர்சனல் புகைப்படங்களையும் சேமிக்க வாய்ப்புள்ளது.

இதில் உலகம் முழுக்க உள்ள பயனர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இதைப் பயன்படுத்துவதாலும் குறிப்பிட்ட அளவுக்கு (15ஜிபி ) பயனாளர்கள் கொடுப்பதால் கூகுளுக்கு லாபமே ஏற்படும். நாம் தேவைக்கேற்ப மட்டும் தரவுகளை 15 ஜிபிக்குள் வைத்துக்கொண்டால் செலவு கையை கடிக்காது.

இதுநாள் வரை இலவசமாக உலவவிட்டது கூட மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி அதன் மதிப்பையும் உயர்த்தி விளம்பரப்படுத்துவதற்காகவும் கூட இருக்கலாம். ஆனால் அந்நிறுவனத்தில் நோக்கமும்வெற்றி பெற்றுள்ளதுதான் நிஜம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுளில் இனி கட்டணம்: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!