Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் ஆராயப்படலாம் ! அதிர்ச்சி தகவல்

Advertiesment
ஃபேஸ்புக்கில்  உங்கள் புகைப்படங்கள் ஆராயப்படலாம் ! அதிர்ச்சி தகவல்
, செவ்வாய், 7 மே 2019 (18:14 IST)
இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்கு உலகமாகவே மாறிவிட்டது ஃபேஸ்புக் , வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள்.  இவையில்லாமல் இன்றைய இளைஞர்களின் நாள் போகாது என்பது போன்று இதிலேயே மூழ்கி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றுவெளியாகியுள்ளது.அதாவது ஃபேஸ்புக்கில் நாம் பதிவேற்றும் புகைப்படங்களை பயனாளர்களுக்கு தெரியாமல், அவர்களின் அனுமதியின்றி ஆராய்ந்து அவற்றை வகைப்படுத்தும் வேலைகளில் நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோவின் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக ஒரு ரகசிய தகவல் வெளியாகிறது.
 
கோடிக்கணக்கான மக்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தினமும் பல கோடிக்கணக்கான புகைப்படங்களை பதிவேற்றிவருகின்றன. இந்த புகைப்படங்களை ஆராய்ந்து அவை நோக்கத்திற்காக பதிவேற்றப்பட்டன என 5 பிரிவுகளில் ஆராய்ந்து வகைப்படுத்தும் பணிகளில் உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
 
மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு  அவுட் சோர்சிங் முறையில் இந்த பனியை ஃபேஸ்புக் நிறுவனங்கள் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி தற்போது ஹைதராபாத்தில் உள்ள விப்ரோ நிறுவனம் இந்தப் பணியை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் ஜனாதிபதி ? திமுக பொருளாளரை கலாய்த்து எச்.ராஜா’ டுவீட்’