இந்தியாவில் பிரபலமாக உள்ள டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தற்போது தனது சப்ஸ்க்ரிப்ஷன் திட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்கள் புதிய படங்களை வெளியிட்டு வருவதுடன், புதிய புதிய இணைய தொடர்களையும் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி ப்ளானை அறிமுகப்படுத்தியது. 399 ரூபாய்க்கு பிராந்திய மொழி நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளும் வகையில் ஒரு ப்ளானும், 1499 ரூபாய்க்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் காணும் ப்ரீமியம் ப்ளானும் இருந்து வந்தது.
தற்போது ஹாட்ஸ்டார் தனது சப்ஸ்க்ரிப்சன் ப்ளானை நெட்ப்ளிக்ஸ் போன்று மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் ஆரம்ப கட்ட ப்ளானாக ரூ.499/வருடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளானில் எஸ்டி குவாலிட்டியில் நிகழ்ச்சிகளை காணலாம். பிராந்திட மொழி அல்லாத ஆங்கில மொழி நிகழ்ச்சிகளையும் இனி இந்த ப்ளான் மூலமாக பார்க்கலாம். ஆனால் மொபைலில் மட்டுமே பார்க்க முடியும்.
அடுத்து ரூ.899 சூப்பர் வருடாந்திர ப்ளான் மூலமாக ஃபுல் ஹெடி தரத்தில் இரண்டு டிவைஸ்களில் நிகழ்ச்சிகளை காணலாம் என்றும், ப்ரீமியம் வருடாந்திர ப்ளான் ரூ.1499க்கு 4 டிவைஸ்களில் அல்ட்ரா ஹெச்டி தரத்தில் நிகழ்ச்சிகளை காண முடியும். இந்த திட்டங்கள் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.