ஜியோ சேவைகளை பயன்படுத்துபவர்களில் இன்னமும் ரீசார்ஜ் செய்யாதவர்களின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜியோ இலவச சேவை நிறைவடைந்ததையடுத்து ஜியோ பிரைம் அல்லது மற்ற ஜியோ ரீசார்ஜ்களை செய்யாதவர்களின் இணைப்பு இனியும் இலவசமாக வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகின்றது.
ரிலையன்ஸ் ஜியோ இறுதியாக அறிவித்த டண் டணா டண் சலுகைக்கு ரீசார்ஜ் செய்யாதவர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யலாம். புதிய சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் கடைசி நாள் குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், ஜியோ ரீசார்ஜ் செய்யாதவர்கள் ஜியோ இணைய தளம், அல்லது மை ஜியோ செயலி கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். அவ்வாறு செய்யாவிடில் இணைப்பு எந்நேரத்திலும் துண்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.