Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீரில் மிதக்கும் கோமெட் ஸ்மார்ட்போன்!! (வீடியோ)

தண்ணீரில் மிதக்கும் கோமெட் ஸ்மார்ட்போன்!! (வீடியோ)
, ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (15:14 IST)
புதிய தொழில்நுட்பம் மூலம் தண்ணீரில் மதிக்கும் ஸ்மார்ட்போன் ஒன்றை பெங்களூரு இளைஞர் வடிவமைத்திருக்கின்றார்.

 
பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் ராஜ் நிறுவிய பாலோ ஆல்டோ சார்ந்த நிறுவனம் தான் கோமெட் கோர். இவர் தான் உலகின் முதல் மிதக்கும் ஸ்மார்ட்போனினை கண்டறிந்துள்ளார்.
 
இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் நீச்சல் குளம், கிணறு எனத் தண்ணீரில் விழுந்தால் மூழ்காமல், மிதக்கும் திறன் கொண்டுள்ளது.
 
இன்டிகோகோவில் அதிகளவு நிதியைப் பெற்று வரும் கோமெட் பயோயண்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். இதில் எவ்வித மிதக்கும் கருவியும் பொருத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அம்சங்கள்:
 
இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா, 4.7 இன்ச் ஸ்கிரீன், 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 
 
வண்ணம் மற்றும் விலை:
 
கருப்பு, வெள்ளை மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கின்றது.
 
இதன் விலை இந்திய மதிப்பில் 32 ஜிபிக்கு ரூ.16,000 என்றும் 64 ஜிபி மாடல் ரூ.19,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலவர் ஜெயலலிதா குணமடைய 1008 பேர் முடிகாணிக்கை