Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்போன் ‘ஹீரோவான ‘ஆப்பிள் ’ஐ -போனுக்கு’ தடை : நீதிமன்றம் தீர்ப்பு !மக்கள் அதிர்ச்சி

செல்போன் ‘ஹீரோவான ‘ஆப்பிள்  ’ஐ  -போனுக்கு’ தடை : நீதிமன்றம் தீர்ப்பு !மக்கள் அதிர்ச்சி
, புதன், 12 டிசம்பர் 2018 (18:14 IST)
உலக நாடுகள் எல்லாம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு  அடிமைகளாகி தொழில்நுட்ப வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்க ...சீன தேசத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இறக்குமதி செய்யக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளதுதான் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துக்கும் அதன் போட்டி நிறுவனமான குவால்காம் நிறுவனத்துக்கும் ’காப்புரிமை வார்’(copyright war) நடந்து வந்ததால் குவால்காம் சீன கோர்டில் ஆப்பிளுக்கு எதிராக வழக்கு தொடுத்தது.
 
இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் புகைப்பட அளவுகளை மாற்றுவது, தொடு திரையில் உள்ள செயலிகளை நிர்வகிப்பது போன்றவற்றில் ஆப்பிள் நிறுவனம் தன் காப்புரிமைகளை மீறி உள்ளதாக கடந்த 2017 ஆம் ஆண்டின் போது குவால்கம் கோர்டில் வழக்கு தொடர்ந்தது.
 
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் (சென்ற மாதம் )நவம்பர் 30 ஆம் தேதி சீனாவுக்குள் ஐபோன்களின் சில மாடல்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது.
 
இந்நிலையில் தற்போது சீனாவில் ஐபோன் பேவரெட் மாடல்களை மக்கள் வாங்ஹ்க முடியாமல் தவிக்கின்றனர்.சீனாவில் ஐபோன்களின் தடை உத்தரவிட்டுள்ளதால் உலகின் மிகப்பெரிய  வணிக சந்தையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு  துண்டு விழ வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 
ஆப்பிள் நிறுவனம் இதற்கு என்ன யுக்தியை கையில் எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண், உறவினரால் கற்பழித்து கொடூர கொலை