Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறப்பம்சம்னா இப்படி இருக்கணும்..! எண்ட்ரி குடுக்கும் Asus ROG Phone 7!

Asus ROG Phone 7
, வெள்ளி, 24 மார்ச் 2023 (16:06 IST)
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக கால் பதித்துள்ள Asus நிறுவனத்தில் புதிய Asus ROG Phone 7-ன் சிறப்பம்சங்கள் பலரை வியக்க வைத்துள்ளது.

இந்தியாவில் 5ஜி அறிமுகமாகிவிட்ட நிலையில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பத்திற்கேற்ப சிறப்பம்சங்கள் கொண்ட பல ஸ்மார்ட்போன் மாடல்களை வரிசையாக களம் இறக்கி வருகின்றன. இந்நிலையில்தான் கணினி தயாரிப்பு நிறுவனமான Asus தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான Asus ROG Phone 7-ஐ விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அதிகபட்சம் 8ஜிபி/12 ஜிபி வரை தங்களது ரேம் கெப்பாசிட்டியை அதிகரித்துள்ளன. ஆனால் ஏஸஸ் தனது Asus ROG Phone 7-ல் 16ஜிபி ரேம் கெபாசிட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக ரேம் கெப்பாசிட்டி கொண்ட மாடல்களில் ஏஸஸ் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இண்டர்னெல் மெமரி 256 ஜிபி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

மேலும் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட், ஆக்டோகோர் ப்ராசஸருடன் இது வெளியாகிறது. 32எம்.பி முன்பக்க கேமரா, 64 எம்பி + 16 எம்பி + 8 எம்பி ட்ரிபிள் கேமரா வசதிகள் கொண்டுள்ளது.

அதுபோல அதிக பவர் கொண்ட 6000 mAh பேட்டரியும், 120W பவர் சார்ஜிங் வசதியோடு இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் விலை ரூ.75,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 17ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லண்டன் மருத்துவமனையில் பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ அனுமதி!