’ 5 ஜி ’ வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் ரெடி!

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (16:30 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் வித்தியாசமான சிந்தனைகள் தான் அதன் வெற்றிக்குக் காரணமாகும். தொடக்கம் முதல் தரத்திலும், வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிலும் அந்நிறுவனம் காட்டிய நேர்மைதான் அதன் பெருமைக்கு சான்றாக உள்ளது.
தற்போதும் முன்னணி நிறுவனமாக இருந்து பல புதிய ஐபோன்களையும் , ஐபேட், கணினி போன்றவற்றை அறிமுகம் செய்துவருகிறது.
 
சமீபகாலமாக ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இடையே உலகம் முழுக்க பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.இந்நிலையில் பல ஆண்டுகளாக இந்நிறுவனங்கள் மாறி மாறி வழக்குத் தொடுத்து வந்தன.
 
இந்நிலையில் தற்போது குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் சார்பில் நீதிமன்றங்களில் தொடுத்த வழக்குகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவனத்திற்கு எவ்வளவு இழப்பீடு தருகிறது என்று கூறவில்லை.
 
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்திற்கும் குவால்காம் நிறுவனத்திற்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிகிறது.இதன்படி குவால்காம் நிறுவனம் பல ஆண்டுகளுக்குத் தேவையான சிப்செட்களை விநியோகம் செய்ய உள்ளது. 
 
எனவே இனி ஆப்பிள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக புதிய ஐபோன்களில் 5 ஜி மாடல்களை உற்பத்தி செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
இதற்கு முன்னதாக இவ்விரு நிறுவனத்திற்கும் இடையே காப்புரிமை பற்றி தீவிரமான பிரச்சனைகள் நடைபெற்று கோர்டிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டரை வருடம் முடிந்துவிட்டது.. முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா? டெல்லியில் டிகே சிவகுமார்

இன்று ஒரே நாளில் 35 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

5 ஆண்டு அவகாசம் தாருங்கள்.. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறை எனக்கு ஓட்டு வேண்டாம்: தேஜஸ்வி யாதவ்..!

நைஜீரியாவை அமெரிக்க ராணுவம் தாக்கும்: டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை..!

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments