உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) வளர்ச்சி வேகமெடுத்து வரும் நிலையில் இந்தியாவின் பிரபல ஜியோ நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கால் பதிக்கிறது.
சமீபமாக தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்து வரும் நிலையில் பல்வேறு டெக்னிக்கல் வேலைகளையும் AI செய்து கொடுப்பதால் பலர் பணி இழக்கும் அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் பிரபலமான ஜியோ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை JIO BRAIN என்ற ப்ளாட்ஃபார்மில் தொடங்கியுள்ளது. இந்த ஜியோ ப்ரெய்ன் Chat GPT, BARD போல அல்லாமல் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஜியோ ப்ரெய்ன் AI மொழிப்பெயர்ப்பு, ஒலிப்பெயர்ப்பு, இமேஜில் இருந்து எழுத்துக்களை பிரித்தல், கோடிங் எழுதுதல், புதிய செயலிகளை உருவாக்குதல் என பல தொழில்நுட்ப சேவைகளையும் வழங்கும் என கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மென்பொறியாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த JIO BRAIN AI உதவியுடன் தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பொதுமக்கள் தங்கள் தொழில்நுட்ப தேவைக்கு ஏற்ற ப்ரொக்ராம்களை, செயலிகளை உருவாக்கிக் கொள்ளவும், பயன்படுத்தவும், அவற்றை மேம்படுத்தவும் முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த JIO BRAIN AI குறித்த மேலதிக விவரங்கள், சேவை விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவைகளுக்கு குறிப்பிட்ட கட்டணம் விதிக்கப்படும் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.