Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

Prasanth K
வெள்ளி, 18 ஜூலை 2025 (09:52 IST)

வாடிக்கையாளர்களை ஈர்க்க விதவிதமான ஆஃபர்களை அளித்து வரும் ஏர்டெல் நிறுவனம் தற்போது பிரபலமான Perplexity AI செயலியின் Pro Versionஐ தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

 

இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உள்ளன. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு JIO Cinema, JIO TV, JIO Saavn என பல சேவைகளை ரீசார்ஜ்க்கு இலவசமாக வழங்கி வருகிறது. அதற்கு இணையாக ஏர்டெல்லும் தனது வாடிக்கையாளர்களுக்கு Airtel Thanks மூலமாக Airtel Xtream, இலவச ஹலோ ட்யூன்கள், இலவச ஆன்லைன் வகுப்புகள் பல சலுகைகளை வழங்குகிறது.

 

அந்த வகையில் தற்போது மக்களிடையே AI பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பிரபலமான Perplexity AI டூலின் ப்ரோ வெர்ஷனை ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்குகிறது ஏர்டெல். இந்த ஏஐ டூலின் ப்ரோ சேவையை ஏர்டெல் வழியாக பெற Airtel Thanks செயலியை இன்ஸ்டால் செய்து, அதில் Airtel Thanks Rewards பகுதிக்கு சென்று Perplexity Pro Redeem செய்து உங்களது மின்னஞ்சல் முகவரியை அளிக்க வேண்டும். அது வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக உங்களுக்கு காட்டும்.

 

அதன்பின்னர் கூகிள் ப்ளே ஸ்டோரில் perplexity AI செயலியை இன்ஸ்டால் செய்து அதில் Login பகுதியில், Redeem செய்வதற்கு அளித்த மின்னஞ்சல் முகவரியை அளித்தால் நீங்கள் perplexity Pro சேவையை பெற முடியும்.

 

perplexity Pro ஏஐ செயலி மற்றும் Desktop Version இரண்டிலுமே இந்த ப்ரோ சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். perplexity தீவிரமான ஆய்வுகளுக்கும், கல்வி தொடர்பான சேவைகளுக்கும் பிரபலமானதாக உள்ளது. மேலும் இதில் Image Generation வசதியும் உள்ளது. Calander, Reminder, Online Shopping, Search support என கூகிள் தேடுபோறிக்கு இணையான, அதற்கும் மேற்பட்ட சேவைகளும் இந்த perplexity Proவில் கிடைக்கிறது. இதன் ப்ரோ வெர்ஷனுக்கு பொதுவாக மாதத்திற்கு 20 டாலர்கள் (ரூபாயில் 1700 வரை) ஆகிறது. இந்த ப்ரோ வெர்ஷனை ஏர்டெல் இலவசமாக வழங்கியுள்ளதற்கு பயனாளர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments