பணமற்ற பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஆதார் எண் அடிப்படையிலான பணப்பரிமாற்ற திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
பயோ மெட்ரிக் அடிப்படையிலான அடையாளம் என்பதால் பல்வேறு துறைகளிலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுக்கு மாற்றாக, ஆதார் எண் அடிப்படையிலான பரிமாற்றத்துக்கான செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த செயலியை அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம். வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பாஸ்வேர்டு, பின் நம்பர் போன்றவை இல்லாமல் ஆதார் எண் மூலம் பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
தற்போது 118 பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துகின்றன.