பிரபலமான கார் நிறுவனமான கியா (KIA) தனது புதிய ஃபேஸ்லிஃப்டர் மாடல் கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதன் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் குடும்பங்கள் பயணிக்கும் வகையிலான கார்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியாவில் பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் கியா நிறுவனம் இந்த புத்தாண்டில் தனது 19 புதிய மாடல் கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இன்று முதல் இந்த கார்கள் விற்பனைக்கு வரும் நிலையில் இதன் குறைந்த பட்ச விலை ரூ.7,99,000 –ல் தொடங்கி அதிகபட்சமாக ரூ.15,69,000 வரை மாடல் மற்றும் சிறப்பம்சங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கார்களில் KIA Sonet, GT Live, X Line, HTX ஆகிய மாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த கார்கள் ஒரு டீசல் எஞ்சின் மற்றும் இரண்டு வகையான பெட்ரோல் எஞ்சின்களை கொண்டு பல்வேறு மாடல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
டீசல் எஞ்சின் 1493 சிசி பவர் கொண்டது. பெட்ரோல் எஞ்சின்களில் ஒன்று 998 சிசி பவரும், மற்றொன்று 1199 சிசி பவரும் கொண்டது. எஸ்யுவி அமைப்பில் 5 பேர் அமரக்கூடிய வசதியுடன் இந்த கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.