இந்திய அரசின் தயாரிப்பான ஆகாஷ் கையடக்க கணினி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இதற்கு போட்டியாக அட்டிடியூட் தக்ஷா என்ற புதிய கையடக்க கணினி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
டெல்மோகோ டெவலப்மெண்ட் லேப்ஸ் பிரைவேட் என்ற நிறுவனம் சார்பில் கேரளாவில் வெளியிடப்பட்ட இந்த கணினி ரூ.5399 விலைக்கு கிடைக்கிறது.
இந்த கணினி வரும் மே 15 முதல் பொது விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டிடியூட் தக்ஷா என்ற இந்த கையடக்க கணினியில் 6 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி உள்ளது.
மேலும், 7 இன்ச் அளவு; தொடுதிரை வசதி, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கோர்டெக்ஸ் ஏ8 ப்ராசசர், 512 எம்.பி டிடிஆர் 3 ரேம், உள்ளிட்ட வசதிகள் கொண்டது.