Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌திரு‌க்கு‌ர்ஆனை ‌பிழை‌யி‌ன்‌றி படி‌க்க...

Advertiesment
உயிர் குறிகளும் புள்ளிகளும்
webdunia photoWD
திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபுகள் தங்களின் மொழியையும், எழுத்தையும் அறிந்திருந்தார்கள். எனவே, உஸ்மான்(ரலி) அவர்கள் திருக்குர்ஆன் பிரதிகளை வெளியிட்டபோது, திருக்குர்ஆனின் எழுத்துகளுக்கு மேலும், கீழும் புள்ளி (நுக்தாக்)கள் வைக்கப்படவில்லை. அகர, இகர, உகர ஒலிகளை அறிவிப்பதற்கான (ஜேர், ஜபர், பேஷ்) என்று இன்று நாம் கூறும்) அடையாளங்களும் இல்லை. இவை இல்லாமலேயே அரபியர் நன்றாகப் படிப்பர். அதுவரை ‌திரு‌க்கு‌ர்ஆனஓதுவ‌தி‌லஎ‌‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌மஎழ‌வி‌ல்லை.

ஆனா‌ல், அரபுலகுக்கு வெளியில் இஸ்லாம் பரவி, அங்குள்ள முஸ்லிம்கள் திருக்குர்ஆனை ஓதத் தொடங்கியபோது அவர்களுக்கு மேற்குறிப்பிட்ட அடையாளங்களும், இலக்கணங்களும் தேவைப்பட்டன. இதற்கு முன்னர் நம் தமிழகத்தில் வாழ்ந்த கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, வள்ளுவர் போன்ற பெரும் புலவர்கள் இருந்தார்கள். பெருங்காவியங்களும் இருந்தன. ஆயினும், இலக்கணம் இல்லை.

இந்நிலையில் இன்னல்லாஹ் பரீவும் மினல் முஷ்ரிகீன வரஸுலுஹஎன்ற ஆயத்தை இன்னல்லாஹ பரீஉம் மினல் முஷ்ரிகீன வரஸு‌லிஹுஎன்று ஒருவர் தவறாக ஓதினார். அதாவது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இணைவைப் போரை விட்டு விலகி இருக்கிறார்கள் என்ற கருத்துள்ள வசனத்தை அல்லாஹ் இணைவைப் போரையும் தன்னுடைய ரசூலையும் விட்டு விலகி இருக்கிறான் என்று தவறான கருத்துப்பட ஓதியதை அபுல் அஸ்வத் அத் தெளலீ (ரஹ்) என்பவர் செவியுற்று,
webdunia photoWD
அல்லாஹுதலா தன் ரசூலை விட்டு விலகி இருப்பதை விட உயர்வானவன், கண்ணியம் நிறைந்தவன் எனக் கூறி விட்டு பாமரர்கள் இப்படியும் தவறாக ஓதுகிறார்களே என்று வருந்தியவர்களாக திருக்குர்ஆனை பிழையின்றி ஓதுவதற்காக அதில் அகர, இகர, உகர ஒலிகளுக்குரிய (ஜேர், ஜபர், பேஷ் போன்ற) அடையாளங்களை ஏற்படுத்தினார்கள்.

இவர் இராக்கிலுள்ள பஸராவைச் சேர்ந்தவர் ஸஹாபாக்களை சந்தித்த தாபியீன்களில் ஒருவர். இவர் தம் விருப்பப்படி திருக்குர்ஆனில் இவ்வாறான அடையாளங்களை இட முடியாது. எனவே இவ்வாறு தவறாக ஓதுவது பற்றிய தகவலை அப்போது கலீஃபாவாக இருந்த அலீ(ரலி) அவர்களுக்கு அறிவித்து, அவர்களின் அனுமதியுடன் அபுல் அஸ்வத்(ரஹ்) செய்ததாகவும் இலக்கணத்திற்குரிய அடிப்படைச் சட்ட விதிகளை அலீ(ரலி) அவர்களே அறிவித்ததாகவும், இதனால் அரபி இலக்கணத்தின் தந்தை அலீ(ரலி) அவர்கள் என்றும் கூறப்படுகிறது. திருக்குர்ஆனில் அகர, இகர, உகர ஒலிகளுக்குரிய அடையாளங்கள் அபுல் அஸ்வத் அவர்களால் இடப்பட்டது சிவப்பு மை புள்ளிகள் மட்டுமே.

அகர ஒலி (ஜபரு)க்கு மேலே ஒரு சிகப்பு புள்ளியும், இகர ஒலிக்கு கீழில் ஒரு சிகப்பு புள்ளியும் உகர ஒலிக்கு (பேஷு)க்கு பக்கவாட்டில் முன்புறத்தில் ஒரு சிகப்பு புள்ளியும், மெல்லினத்திற்கு இரண்டு சிகப்புப் புள்ளியும் இடப்பட்டது.

பின்னர் அப்துல் மலிக் இப்னு மர்வான்(ரஹ்) அவர்கள் கலீஃபாவாக இருந்தபோது, இராக் மற்றும் குராஸானுக்கு இராணுவ கவர்னராக இருந்த தளபதி அல்ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப் அத் தக்ஃபீ (ரஹ்) என்பவரின் ஆணைப்படி ஹிஜ்ரி 42ம் ஆண்டு அல்கலீல் இப்னு அஹ்மத் அல் பராஹீத்(ரஹ்) என்பவர் இரட்டை அட்சரத்திற்கும் (ஷித்தத்துக்கும்) அளபடெக்கும் (மத்துக்கும்), ஹம்ஸாவிற்கும், ஒற்றுக்கும் (ஸுக்கூனுக்கும்), இணைப்புக்கும் (வஸ்லுக்கும்) இப்பொழுதுள்ள அடையாளங்களை ஏற்படுத்தினார். இதற்குப் பிறகு அகர, இகர, உகர ஒலிகளுக்குரிய சிகப்பு மைப்புள்ளி அடையாளங்கள் தற்போதுள்ள அமைப்பில் ஜபர், ஜேர், பேஷ் அடையாளங்களாக மாற்றப்பட்டன.

webdunia photoWD
திருக்குர்ஆன் பிழையின்றி ஓதப்பட வேண்டும் என்பதற்காக இவ்வளவு ஏற்பாடுகள் செய்தும் மீண்டும் மீண்டும் பலர் தவறாகவே ஓதினார்கள். இதனைக் குறித்து அறிஞர்கள் ஒன்று கூடி கலந்தாலோசித்து பலரால் எழுதப்பட்டு ஓதப்படுகிற திருக்குர்ஆனின் அட்சரங்களையும் ஓதும் முறை (கிராஅத்து)களையும் ஒப்பிட்டுப் பார்த்து சீர்தூக்கி இவற்றில் எது சரி? எது தவறு? என்பதை விபரித்து திருக்குர்ஆனை ஓதும்போது ஏற்படும் தவறுகளைக் களைந்தார்கள்.

திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் முதன் முதலாக லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து அருளப்பட்டது. அந்த நன்றிக்காக அம்மாத இரவில் தராவீஹ் தொழுகை ஏற்பட்டது. அம்மாதத்தில்தான் திருக்குர்ஆன் முழுவதையும் நபி(ஸல்) அவர்களும் ஜிப்ரயீல் (அலை) அவர்களும் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒருவருக்கொருவர் ஓதி சரிபார்த்துக் கொள்வது வழக்கம். எனவே, ரமளான் மாதத்தில் தொழுகையாளிகள் குர்ஆன் முழுவதையும் குறைந்தபட்சம் ஒரு முறையேனும் ஓதியோ, செவியுற்றோ இறையருளை அடைவதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு தளபதி ஹஜ்ஜாஜ் இப்னு யூஸ·ப் அத் தக்ஃபீ திருக்குர்ஆனை முப்பது பாகங்களாக (ஜுஸ்வுகளாக)ப் பிரித்தார். ஒவ்வொரு ரக்கஅத்திலும் ஓதுவதற்கு ஏற்றாற் போன்று ருக்கூவுகளையும் நிர்ணயித்தார். மாமூன்அர் ரஷீத் கலீஃபாவாக இருந்தபோது அவருடைய ஆணையின் பேரில் ருகூவுகள், உஷ்ருகள் பிரிக்கப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. இவ்விவரங்களை தஃப்ஸீர் ரூஹுல் பயானில் காணலாம்.

குறிப்பு : முஸ்லிம்கள் திருக்குர்ஆனை பிழையின்றி ஓத வேண்டும் என்பதற்காக இங்கு குறிப்பிட்டுள்ள ஏற்பாடுகளைச் செய்து உலக முஸ்லிம்களின் நன்றிக்கு உரியவரான தளபதி ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப் அத்தக்பீ(ரஹ்) அவர்களை தமிழ் நாட்டிலுள்ள சில நண்பர்கள் தங்கள் உரைகளில் மரியாதைக் குறைவான வார்த்தைகள் மூலம் தங்களின் கடுங்கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். நபிமார்கள்தாம் பாவம் செய்ய முடியாதவாறு தடுக்கப்பட்ட (பாவமற்ற)வர்கள். மற்றவர்கள் நன்மை, தீமை இரண்டுக்கும் இலக்காகுபவர்கள். எனவே, திருக்குர்ஆனுக்கு இவ்வாறான திருப்பண‌ியைச் செய்து நிரந்தரமான நன்மையைப் பெறுகிற இதே நபர் தான் திரு கஅபாவையும் இப்பொழுதுள்ள வடிவில் இறுதியாக புதுப்பித்துக் கட்டியவராவார்.


Share this Story:

Follow Webdunia tamil