Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்கள் ‌வி‌நியோக‌ம்

Advertiesment
ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்கள் விநியோகம்
, புதன், 4 மார்ச் 2009 (13:48 IST)
ஹ‌ஜ் பு‌னித‌ப் பயண‌ம் செ‌ய்ய ‌விரு‌ம்பு‌ம் த‌மிழக‌த்‌தி‌ல் வ‌சி‌‌க்கு‌ம் இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ளு‌க்காக ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் ‌வி‌நியோக‌ம் துவ‌ங்‌கு‌கிறது.

தமிழ்நாடு மாநில ஹஜ் பயணக்குழு உறுப்பினர்-செயல் அலுவலர் வெளியிட்ட செய்தியில் கூறப்பி‌ல், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள், அதற்கான விண்ணப்பங்களை, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை-சென்னை 34), ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 5-3-2009 முதல் பெற்றுக் கொள்ளலா‌ம்.

ட‌பி‌ள்யுட‌பி‌ள்யுட‌பி‌ள்யு.ஹ‌ஜ்க‌மி‌ட்டி.கா‌ம் எ‌ன்ற (hajcommittee)
இணைய தளம் மூலமாகவும் விண்ணப்ப நகல் எடுத்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31-3-2009 ஆகும்.

பன்னாட்டு கடவுச் சீட்டில் மட்டுமே (பாஸ்போர்ட்) ஹஜ் பயணத்துக்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோரில், தெரிவு செய்யப்படுவோர் அனைவரும் பன்னாட்டு கடவுச் சீட்டு பெவேண்டும் எனவும் ெரிவிக்கப்படுகிறது எ‌ன்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil