ஸஹர் உணவில் மிக அதிகமான நன்மைகள் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை வலியுறுத்தி, "ஸஹர் செய்யுங்கள்! நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் இருக்கிறது" என்று கூறினார்கள்.(
ஸஹீஹூல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்)
காரணம் என்னவெனில், ஸஹர் நேரத்தில் விழித்தெழுவது இரவில் நின்று வணங்க வாய்ப்பை ஏற்படுத்தும். ஃபஜ்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் பள்ளியை நோக்கி நடக்கச் செய்வதுடன், நோன்பு நோற்க உடல் வலிமையையும் தருகிறது. இதை நபி (ஸல்) அவர்கள் தானும் செய்து தனது தோழர்களுக்கும் பயிற்சியளித்தார்கள்.
ஜைது இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் உணவை உண்டோம். பிறகு தொழுகைக்குச் சென்றோம்" என்று கூறினார்கள். ஒருவர் "அந்த இரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு நேரம் (இடைவெளி) இருந்தது?" என்று கேட்டார். "50 ஆயத்துகள் (ஓதும் நேரம்)" என ஜைது (ரழி) பதிலளித்தார்கள்.
(ஸஹீஹூல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்)
நோன்பின் போது உம்மை யாரேனும் திட்டினால் அல்லது உம்மிடம் முறையற்று நடந்து கொண்டால், நிச்சயமாக நான் நோன்பாளி! நிச்சயமான நான் நோன்பாளி! என்று கூறி (ஒதுங்கி) விடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னு குசைமா
எத்தனையோ நோன்பாளிகளுக்கு (அவர்கள் உணர்ந்த) பசியையும் தாகத்தையும தவிர வேறு எந்த கூலியும் நோன்பிற்காகக் கிடைக்காது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அஹ்மத்
அல்லாஹ் கூறுகிறார் :
ஈமான் கொண்டாரோ! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பயபக்தியுடையவராகலாம்.
அல்குர்ஆன் : 2:183
எனவே உங்களில் எவர் அம்மாதத்தை - ரமலானை -பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்று விடவும். எவரேனும் நோயாளியாகவோ, பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் ( ஏற்கனவே விடுபட்ட நோன்பினை கணக்கிட்டு நோன்பு நோற்றுவிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். மேலும் அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை.
அல்குர்ஆன் : 2:185