Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரமலான் மாதத்தில் உடல் நலம்

Advertiesment
ரமலான் மாதத்தில் உடல் நலம்

Webdunia

, சனி, 6 அக்டோபர் 2007 (11:47 IST)
ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருப்பதால் சிலரது உடல் நலம் பாதிக்கும் நிலை உருவாகலாம்.

இந்த மாதத்தில் நமது உணவு முறை வெகுவாக மாறுகிறது. எனவே இந்த மாதத்தில் நோன்பு கடைபிடிப்பவர்கள் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினால் தங்களது உடல் எடை அதிகளவு குறைவதையோ அல்லது கூடுவதையோ தவிர்க்கலாம்.
webdunia photoWD


முக்கியமான குறிப்பு என்னவென்றால், அதிக மணி நேரங்கள் நோன்பு இருந்தபின்பு உண்ணும் உணவு மெதுவாக ஜீரணமாகக் கூடிய உணவாக இருப்பது நல்லது. அதாவது நார் சத்து அடங்கிய உணவினை உண்ணலாம்.

8 மணி நேரமும் அதற்கு மேலும் தொடர்ந்து நோன்பு இருந்துவிட்டு உண்ணும்போது மெதுவாக ஜீரணமாகக் கூடிய உணவையும், 3 அல்ல 4 மணி நேரங்கள் நோன்பு இருந்த பின் உண்ணும் உணவு வேகமாக ஜீரணமாகக் கூடியதாகவும் இருந்தால் நலம்.

மெதுவாக ஜீரணமாகக் கூடிய உணவுகள் : பருப்பு அல்லது கொட்டை வகைகள். அதாவது பார்லி, கோதுமை, ஓட்ஸ், பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகியவையாகும்.

வேகமாக ஜீரணமாகக் கூடிய உணவுகள் : சர்க்கரை, மைதா மாவு மற்றும் சிலவாகும்.

நார் சத்துள்ள பொருட்களில், முழு கோதுமை, காய்கறிகள், தானியம் மற்றும் கொட்டைகள், பட்டாணி, பீட்ரூட் கீரை, தோலுடன் பழங்கள், உலர்ந்த பழங்கள் ஆகியவை அடங்கும்.

நோன்பு முடிந்து நாம் உண்ணும் உணவு சமச்சீர் உணவாக அமைய வேண்டும். அதாவது பழம், காய்கறி, மாமிசம், ரொட்டி மற்றும் பால் பொருட்கள் நிறைந்ததாக இருத்தல் அவசியம்.

இதனால் நோன்பின் போது உடல் எடையில் எந்த பிரச்சினையும் வராது. உடல் நலக் குறைவும் ஏற்படாது.

முக்கியமாக செய்யக் கூடாதவை

வறுத்த பொரித்த உணவுகளை உண்ணக் கூடாது. சர்க்கரை சேர்ந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. காலை உணவின் போது அதிகமான உணவை உண்ணக் கூடாது. அதிகமாக டீ அருந்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. அப்படி நோன்பின் போது புகைப் பிடித்தால் பாதியிலேயே நீங்கள் நோன்பை கைவிடும் நிலை ஏற்படலாம்.

செய்ய வேண்டியவை

பேரிட்சம் பழங்கனை உண்ணலாம். இது உடலுக்குத் தேவையான சக்திகளைத் தருகிறது. வாழைப் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil