ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பதில் சிலருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் யார் எனில், பிரயாணிகள், மாதவிடாயில் இருக்கும் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும்ம அன்னையர்கள், நோயாளிகள் போன்றோர் ஆவார்கள்.
இவர்கள் நோன்புக் கடமையை நிறைவேற்ற வாய்ப்பும் தரப்பட்டுள்ளது.
அதன்படி, இவர்கள் விடுபட்ட நோன்பை, சகஜ நிலைக்குத் திரும்பியதும் மீண்டும் நோற்க வேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள் நிரந்தரமாக நோன்பை விட்டுவிடவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு நோன்பை விடும் வசதி படைத்த முதியவர்கள், ஒவ்வொரு நோன்பு நாளன்றும் ஒரு ஏழைக்கு உணவளிப்து கடமையாக்கப்பட்டுள்ளது.
வசதியற்ற முதியவர்களுக்கு இந்த கடமை பொருந்தாது.