இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து, மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தொழுகை நடத்தியபின் உண்ணும் உணவே இஃப்தார் எனப்படுகிறது.
இஃப்தார் என்றால் நோன்பை முடித்துக் கொள்வது என்றும், காலை உணவு என்றும் பொருள்படுகிறது.
இஸ்லாமியர்கள் தங்களது நோன்பை முடிக்கும் வகையில் தண்ணீர், பால் அல்லது பேரிட்சம் பழங்களை உண்ணுவர்.
சூரியன் அஸ்தமனமாகி 12 அல்லது 15 நிமிடத்திற்குள் இஃப்தார் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது நோன்பை முடித்து உணவு உண்ண வேண்டும்.
நோன்பை முடித்து இஃப்தார் எடுக்கும் வேளையில், "இறைவனே, நான் நோன்பை கடைபிடித்தேன். நீங்கள் எனக்கு அளித்த இந்த உணவைக் கொண்டு அந்த நோன்பை நான் முடித்துக் கொள்கிறேன்" என்று கூற வேண்டும்.
இஃப்தார் உணவை தொழுகை நடத்தியப் பின் உறவினர்களும், நண்பர்களும் சேர்ந்து உண்டு மகிழ்வர்.
சிலர் இஃப்தார் உணவை தங்களுக்கு நெருங்கியவர்களின் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று கொடுப்பர். அங்கு சென்று ஒன்றாக அமர்ந்து உணவருந்துவர்.
இதுபோன்று நோன்பு முடிந்து இஃப்தார் உணவு உண்பதில் பலரும் பலவிதங்களைக் கடைபிடிக்கின்றனர்.