Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!
எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. எந்த பூமியில் மரணமடைவோம்  என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, இறைவன் தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும், தெரிந்தவனாகவும்  இருக்கின்றான்.


 
 
* எவருடைய கன்னத்திலும் அடிக்காதீர்கள். ஏனென்றால், முகத்தை அல்லாஹ் தன் கரத்தால் உருவாக்கினான்.
* வயிறு புடைக்க உண்ணாதீர்கள். தொடர்ந்து இறைச்சி உண்ணாதீர்கள். ஏனென்றால், உங்கள் உள்ளம் இருளாகி விடும்.
* இடது பக்கமாக எச்சில் துப்புங்கள் அல்லது உங்கள் பாதங்களுக்கு இடையில் துப்பி மண்மூடி மறைத்து விடுங்கள்.  வலதுபக்கமோ அல்லது மேற்கு திசையிலோ துப்பாதீர்கள்.
* பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள்.
* அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
* விருந்தினர்களை விருப்பத்துடன் உபசரியுங்கள்.
* சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள்
* இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசாதீர்கள்.
* உடலை அலங்கரிப்பதிலும், உடை அணிவதிலும் மிதமான போக்கை கைக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்.
* இறைவன் நன்கறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும்  அதிகாரமும் அவனுக்குரியவையே.
* இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது.
* இறைவனைத் தவிர வானங்களிலும், பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வது மாதப்பிறப்பு; ஆன்மிக தகவல்கள்!