Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துக்கத்தை வெளிப்படுத்தும் மொஹரம் பண்டிகை....

துக்கத்தை வெளிப்படுத்தும் மொஹரம் பண்டிகை....

துக்கத்தை வெளிப்படுத்தும் மொஹரம் பண்டிகை....
, புதன், 12 அக்டோபர் 2016 (18:18 IST)
இஸ்லாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது இஸ்லாமிய மதப்பிரிவுகளுள் சன்னி இஸ்லாமிற்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும்.


 
 
சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு மொகரம் ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம்.
 
மொஹரத்தை “மாரடி விழா” என்றும் இவற்றை ராயப்பேட்டையிலேயே மக்கள் கறுப்பு உடை அணிந்து ஊர்வலம் சென்று இது போல துக்கம் அனுஷ்டிப்பதை பார்த்திருப்போம். ஹைதரபாத்தில் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். மற்ற வட இந்திய நகரங்களில் அமர்க்களமாகக் கொண்டாடுவார்கள்.
 
சன்னி இஸ்லாத்தில் "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' அதாவது ஓடு ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.
 
மொஹரம் என்பது துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடம்பை கத்தி, பிளேடு போன்ற கூர்மையான ஆயுதங்கலால் கீறி கொண்டு தங்களுடைய துயரத்தை வெளிப்படுத்துவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமையும்?