ரமலான் நோன்பு நேர அட்டவணை!
, சனி, 6 செப்டம்பர் 2008 (17:57 IST)
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்கியுள்ளது. நோன்பு கடைபிடித்து இறைவனின் நாமத்தையே ஓதிக் கொண்டு இல்லாதவர்களுக்கு உதவி செய்து தங்களது கடமையை நிறைவேற்றும் மாதமாகும்.இந்த மாதத்தில் நோன்பு துவக்குவதற்கு முன்பும், திறக்கும் போதும் கூறப்படும் வாசகங்களும், சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் நோன்புக்கான கால அட்டவணையும் கொடுக்கப்படுகிறது.ஸஹர் நிய்யத் நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்லி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹி தஆலா இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்லான் நோன்பை அதாவாக நாளை நோற்பதற்கு நிய்யத்து செய்கிறேன். அல்லாஹ்வுக்காக.இஃப்தார் துஆ அல்லாஹும்ம லக்க ஸும்த்து வபிக ஆமன்த்து வஅலைக்க துவக்கல்த்து வஅலா ரிஜ்க்கிக்க அஃப்தர்த்து ஃபதகப்பல்மின்னியா அல்லாஹ் உனக்காகவே நோன்பு நோற்றேன் உன்னைக் கொண்டே ஈமான் கொண்டேன் உன் மீதே பொறுப்பு சாட்டினேன். உன்னுடைய ரிஜ்க்கை கொண்டே நோன்பு திறக்கிறேன். இதை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக.லைலத்துல் கத்ர் இரவில் அதிகமாக ஓத வேண்டிய துஆஅல்லாஹும்ம இன்கை அஃபுவ்வுன் துஹிப்புல் அஃபுவ் பஉஃபுஅ அன்னாயா அல்லாஹ் நிச்சயம் நீ மன்னிக்கக் கூடியவன் மேலும் மன்னிப்பை நீ விரும்பக் கூடியவன் எனவே எங்களை மன்னித்து விடுவாயாக.நோன்பு நேர அட்டவணை
ரமலான் நோன்பு நேர அட்டவணையின் தொடர்ச்சி