Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரமலானின் சிறப்புகள்

ரமலானின் சிறப்புகள்
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:49 IST)
முஸ்லிம்களின் 5 கடமைகளான கலிமதொழுகை நோன்பு, ஜக்காத் (தானம் செய்தல்), ஹஜ். இவற்றில் தொழுகைதான் மிகவும் முக்கிகடமையாக திகழ்கிறது இதற்கு அடுத்த இடத்தை நோன்பு எனப்படும் விரதம் இருத்தல் கடமபெற்றுள்ளது.

ரமலான் என அழைக்கப்படும் நோன்பு காலமமுஸ்லிம்களின் வசந்காலம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரமலானினமகத்துவத்தில் நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

முஸ்லிம்களின் மாதங்களான 12 மாதங்களிலரமலான் மாதத்திற்குதான் சிறப்பு தன்மைகள் பல உள்ளதாக முஸ்லிம் சான்றோர்கள் பலரதெரிவித்துள்ளனர்.

ஈதுல் பித்ர் என அழைக்கப்படும் ஈகைததிருநாள், ரமலான் மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படுகிறது.

webdunia photoFILE
ரமலான் வந்துவிட்டால், ஒருவருக்கஒருவர் உதவி செய்தல் என்பதும், இல்லாதோருக்கு இருப்போர் உதவி செய்தல் என்பதுமஅதிகரித்துவிடும்.

ரமலான் நோன்பு இருப்பவர்கள் முதல் பிறகண்பின்னரதான் தங்களது நோன்பை (விரதமிருத்தலை) தொடங்குகின்றனர்.

நோன்பு இருக்கும் 30 நாட்களும் சூரியனஉதிப்பதற்கு முன்பாக எழுந்து உணவு உண்ண வேண்டும். இந்த நேரத்தை சஹர் உடைய நேரமஎன்று அழைக்கின்றனர்.

சூரியன் உதிக்கும் முன்பாக உணவு எடுத்பின்னர், சூரியன் மறையும் வரை தண்ணீர் கூட பருகக் கூடாது. சூரியன் மறைந்த பின்னரநோன்பு திறக்க வேண்டும்.

நோன்பு திறத்தலை இப்தார் என்றஅழைக்கின்றனர். நோன்பு திறக்கும்போது சரியான நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமநேரத்தை கணக்கில் கொண்டு நோன்பு திறக்க வேண்டும். தாமதம் கூடாது என்றவலியுறுத்தப்படுகிறது.

ஊர்விட்டு ஊர் செல்லும் பயணிகள், நோயாளிகளை தவிர அனைவருக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. 7 வயதகுழந்தைகளுக்கும் நோன்பு பிடிப்பதற்கு அனுமதி உண்டு. சிறுவர் - சிறுமிகளநோன்பின்போது சோர்வடைந்தால், அந்த நேரத்தில் அவர்கள் நோன்பை திறந்து கொள்ளலாம். இதற்கு அவர்களது பெற்றோர்களின் கவனம் அதிகம் தேவை.

மாதவிடாய் காலங்களைத் தவிர மற்ற நாட்களிலபெண்கள் நோன்பு இருப்பது கடமையாகும். நோன்பு இருக்கும் நேரத்தில் ஐங்கால தொழுகையநிறைவேற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

சுபுஹீ எனப்படும் அதிகாலை தொழுகைக்கமுன்பு நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள், மஹ்ரிப் எனப்படும் மாலை நேர தொழுகைக்கமுன்பாக நோன்பு திறப்பது வழக்கம். சூரியன் அஸ்தமனம் மற்றும் உதய நேரங்களை கணக்கிலகொண்டு இந்த 2 நிகழ்ச்சிகளும் செயல்படுத்தப்படுகின்றது.

நோன்பு இருப்பவர்கள் ஐம்புலன்களையுமஅடக்கி ஆள வேண்டும். புறம் பேசுதல், பொய் சொல்லுதல், பிறருக்கு துன்பமவிளைவித்தல், பிறர் மணம் புண்படுமாறு பேசுதல் கூடாது.

நோன்பு இருக்கும் நேரத்தில் தவறாவார்த்தைகளையோ, தவறான செயல்களையோ பயன்படுத்தினால் நோன்பமுறிந்துவிடும்.

நோன்பு இருப்பதன் மூலமஉடலின்அனைத்து பாகங்களும் ஓய்வெடுக்கின்றன. குறிப்பாக குடல் எனப்படும் வயிற்றின் முக்கிய உறுப்புக்கள், ஒரு மாதம் ஓய்வு பெறுவதன் மூலம் பலவிதமான நோய்களில் இருந்து மனிதனகாக்கப்படுகின்றான்.

வருடம் ஒன்றின் 365 நாட்களும் உணவஅரைபொருள் நிலையமாக திகழும் மனிதனின் உடல், நோன்பு எனப்படும் 30 நாள் விரதத்தால், ஓய்வு பெறுகிறது. இதன் மூலம் உடல் புத்துணர்வு பெறுகிறது.

நோன்பு காலங்களில் நடைபெறும் இரவதொழுகைக்கு பெயர் தராவீஹ் ஆகும். நோன்பு இருப்பவர்கள் இஷா எனப்படும் இரவதொழுகைக்கு பின்னர் தராவீஹ் தொழுகை மேற்கொள்ள வேண்டும்.

ரமலான் மாதத்தில்தான் இறைவனின் இறுதிததூதரான முகம்மது நபி மீது குர் ஆன் வசனம் இறக்கி வைக்கப்பட்டது.

30 பாகங்களைக் கொண்ட குர்ஆனின் அத்தியாயங்களஅனைத்தும் ஒவ்வொரு இரவு தராவீஹ் தொழுகையின்போது ஓதப்படும்.

ரமலான் மாதத்தில் குர்ஆன் ஓதுபவர்களுக்கஅதிகமான நன்மைகள் கிடைக்கும் என முஸ்லிம் சான்றோர்களகூறியுள்ளனர்.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானுக்கு பசிறப்புகள் உண்டு. இந்த மாதத்தில் தானம், தர்மம் அதிக அளவில் செய்வேண்டும்.

இல்லாதோருக்கு இருப்போர் உதவ வேண்டும். நோன்பு பிடித்துக் கொண்டு மனோ இச்சைப்படி நடப்பதோ, பாவங்களில் ஈடுபடுவதோ மிகப்பெரிகுற்றமாகும். நோன்பு இருப்பவர்களையும் பழித்து பேசக்கூடாது.

நோன்பு வைத்துள்ள ஒருவருடன் அவரைப் பற்றி தெரியாத நபர்கள் எவரேனும் சண்டையிடவோ, தர்க்கம் செய்யவோ முற்பட்டால் நான் ஒரநோன்பாளி என முன்னதாகவே கூறி அந்த சூழ்நிலையில் இருந்து விலகிக் கொள்வேண்டும்.

நோன்பிருக்கும் காலங்களில் நன்மைகளசெய்து தீமைகளை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோன்பு திறப்பதற்கு தண்ணீர் அல்லதபேரிச்சம் பழத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோன்பு திறப்பதற்காக ஒவ்வொரமசூதிகளிலும், அவர்களின் வசதிக்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்படும். நோன்பதிறப்பவர்களுக்காக அரிசி கஞ்சி விநியோகிக்கப்படும்.

ரமலான் மாதம் நன்மையை மட்டுமபோதிக்கவில்லை. ஒற்றுமையையும் போதிக்கிறது. 30 நாட்கள் நோன்பிருந்து, அதன் முடிவில் ஈதுலபித்ர் எனப்படும் ஈகை திருநாள் ரம்ஜான் பெருநாளாகொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் புத்தாடை அணிந்ததொழுகைக்குச் செல்ல வேண்டும். ரம்ஜான் நாளன்று நோன்பு இருப்பது கூடாது. 30 நாட்களில் விட்ட நோன்புகளை ரம்ஜான் பெருநாளுக்குப் பின்னர் வரும் முதல் 6 நாட்களிலமீண்டும் இருந்து கொள்ளலாம்.

webdunia
webdunia photoWD
ஆக மனிதனை புனிதனாக்கும் மாதம்தானரமலான் மாதம். இந்த மாதம் இதோ வந்துவிட்டது. முஸ்லிம்கள் அனைவரும் ரமலான் மூலமநன்மைகள் செய்வதற்கும் தயாராகி விட்டனர்.

இந்த புனித மாதத்தில் அடியெடுத்தவைத்துள்ள இஸ்லாமிய நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் வாழ்த்துக் களகாணிக்கையாக்குவோம்.

Share this Story:

Follow Webdunia tamil