12 ரன்களில் அவுட் ஆன ருத்ராஜ்: 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்கள் இழந்த சிஎஸ்கே!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (16:12 IST)
ஐபிஎல் தொடரின் ஐம்பத்தி மூன்றாவது போட்டி இன்று துபாய் நகரில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ருத்ராஜ் மற்றும் டூபிளஸ்சிஸ் களமிறங்கிய நிலையில் ருத்ராஜ் 12 ரன்களில் அவுட்டானார். அதேபோல்  ராபின் உத்தப்பா 2 ரன்களில் அவுட் ஆனார் என்பதும், மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தற்போது டுப்லஸ்ஸிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு பேட்டிங் செய்து வருகின்றனர் என்பதும் சென்னை அணி சற்று முன் 3 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வென்றால் அந்த அணி 12 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு சில வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments