Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஐபிஎல் வீரர் ஆக்ஸிஜனுக்காக ரூ.40 லட்சம் உதவி !.

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (17:17 IST)
பிரபல ஆஸ்திரேலிய வீரர் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.40 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் ஹாஸ்பிடலில்  ஆக்ஸிஜன் பற்றாகுறையால் நோயாளிகள் 20 பேர் பலியாகினர். மேலும் கொரோனா இரண்டாவது அலையில் 54.5 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய 50,000 டாலர் நிதியுதவி செய்துள்ளார்.  இந்த 50,000 டாலர் நிதியை பிரதமரின் கொரோனா நிவாரண நிதியுதவி திட்டத்திற்காக பாட் கம்மின்ஸ் அளித்துள்ளார்.

இந்திய மதிப்பில் இது ரூ.40 லட்சம் ஆகும். 2021 ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் பாட் கம்மின்ஸ்  என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments