Publish Date: Fri, 24 Sep 2021 (23:26 IST)
Updated Date: Fri, 24 Sep 2021 (23:29 IST)
ஐபிஎல் 14 வது சீசனில் இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் சென்னை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
எனவே முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் தேவ் 70 ரன்களும் விராட் கோலி 53 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அடுத்துக் களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.